கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் "சமூக சக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்" திட்டத்தின் கீழ், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவிலும் அபிவிருத்திப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட J/349 (கரணவாய் வடக்கு) கிராம அலுவலகர் பிரிவில் உள்ள ஐந்து விவசாயக் கிணறுகளைப் புணரமைப்பு செய்வதற்காக 1.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Read more: கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் ‘சமூக சக்தி’ செயற்றிட்டம்
கரவெட்டி பிரதேச செயலகத்தில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தின கொடிவார நிதி சேகரிப்பு இன்று (01.06.2026) ஆரம்பம்.சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, வருடாந்தம் நடாத்தப்படும் கொடிவார நிதி சேகரிப்புப் பணி கரவெட்டி பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் (01.06.2026) மதிப்பிற்குரிய எமது பிரதேச செயலாளர் அவர்களிற்கு கொடி அணிவிக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புகைத்தலினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிதியைத் திரட்டுதலோடு புகைத்தலற்ற ஆரோக்கியமானதொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் இக் கொடிவாரம் முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது
Read more: சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தின கொடிவார நிதி சேகரிப்பு
கரவெட்டி பிரதேச செயலகத்தில் உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்தும் மாதாந்த சந்தை இன்று (25.05.2026) திங்கட்கிழமை நடைபெற்றது.உள்ளூர் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் சுயதொழில் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கவும் நடாத்தப்படும் மாதாந்த சந்தை இன்றைய தினம் கரவெட்டி பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Read more: கரவெட்டி பிரதேச செயலகத்தில் உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்தும் மாதாந்த சந்தை
கரவெட்டி பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண் தொழில் முயற்சியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வானது இன்றைய தினம் திங்கட்கிழமை (25.05.2026) காலை 9.30 மணிக்கு கரவெட்டி பிரதேச செயலாளர் தலைமையில் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
Read more: கரவெட்டி பிரதேச செயலகத்தில் பெண் தொழில் முயற்சியாளர்கள் கௌரவிப்பு
கரவெட்டி பிரதேச செயலகத்தில் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கும், கௌரவிப்பு நிகழ்வும் வெள்ளிக்கிழமை (22.05.2026) பிற்பகல் 2:30 மணியளவில் கரவெட்டி பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள கணக்காளர் திரு. இரட்ணம் முருகதாஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக நெல்லியடி வர்த்தக சங்கத்தின் செயலாளர் திரு. இராஜதுரை பிரதீப் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.












