05.05.2026

பிரதேச மட்ட வருடாந்த விளையாட்டு விழா -தடகளபோட்டிகள்
கரவெட்டிப் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு விழாவின் தடகளப் போட்டிகள் ​ ஜூன் 27 (சனிக்கிழமை) மற்றும் ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களிலும், யா/விக்னேஸ்வரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
julythadakalam1 julythadakalam2 julythadakalam3
 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

05.05.2026

பிரதேச மட்ட விளையாட்டு விழா 2026

எமது பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட பிரதேச மட்ட போட்டிகளில் ஓர் அங்கமான கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிப்போட்டிகள் கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் 03.05.2026 (ஞாயிற்றுக்கிழமை ) பெண்கள் அணிகளுக்கும் 04.05.2026 (திங்கட்கிழமை) ஆண்கள் அணிகளுக்கும் நடைபெற்றது. பெண்களுக்கான போட்டியில் றேஞ்சஸ் அணி முதலாம் இடத்தினையும், கலட்டி ஜக்கிய சனசமூக நிலைய அணி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.ஆண்களுக்கான போட்டியில் கலைமதி அணி முதலாம் இடத்தினையும் டயமென்ட் அணி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது
 
5may1 5may2 5may3

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

26.04.2026

பிரதேச மட்ட விளையாட்டு விழா 2026

எமது பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட பிரதேச மட்ட போட்டிகளில் ஓர் அங்கமான கயிறிழுத்தல் போட்டிகள் றேஞ்சஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் 26.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.ஆண்களுக்கான போட்டியில் கலட்டி ஜக்கிய சனசமூக நிலைய அணி முதலாம் இடத்தினையும்,டயமன்ஸ் அணி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.பெண்களுக்கான போட்டியில் றேஞ்சஸ் அணி முதலாம் இடத்தினையும், J/375 கிராம அலுவலர் பிரிவு அணி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.இப்போட்டியில் பங்குபற்றிய அனைத்து வீர வீராங்கனைகளுக்கும் வாழ்த்துக்கள்
26april1 26april2 26april3

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

25.04.2026

பிரதேச மட்ட விளையாட்டு விழா 2026
எமது பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட பிரதேச மட்ட போட்டிகளில் ஓர் அங்கமான கபடி போட்டிகள் மைக்கல் விளையாட்டுக் கழக மைதானத்தில் 25.04.2026 (சனிக்கிழமை) நடைபெற்றது.ஆண்களுக்கான போட்டியில் மைக்கல் அணி முதலாம் இடத்தினையும்,சுடர் ஒளி விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.பெண்களுக்கான போட்டியில் றேஞ்சஸ் அணி முதலாம் இடத்தினையும், டயமன்ஸ் அணி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
25april1 25april2

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

23.04.2026

கரவெட்டியில் இடம்பெற்ற பிரதேச மட்ட பூப்பந்தாட்டப் போட்டிகள் ஆண்கள் பிரிவில் மகேசன் அணியும், பெண்கள் பிரிவில் J/375 கிராமசேவகர் பிரிவு அணியும் முதலிடம்!

​வடமராட்சி தெற்கு மேற்கு, கரவெட்டி பிரதேச செயலகத்தின் வருடாந்த விளையாட்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட பிரதேச மட்ட பூப்பந்தாட்டப் போட்டிகள் (ஆண்கள், பெண்கள்)கடந்த 2026.04.23 வியாழக்கிழமை அன்று, கரணவாய் கிழக்கு இளைஞர் விளையாட்டு கழகப் பூப்பந்தாட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் மாலை 4.30 மணிக்கு இப்போட்டிகள் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று முடிந்தன.​ பிரதேசத்தின் பல முன்னணி கழகங்கள் மோதிய இப்போட்டித் தொடர் விறுவிறுப்பாக அமைந்திருந்தது.ஆண்கள் பிரிவில் திறமைகளை வெளிப்படுத்திய மகேசன் அணி முதலாம் இடத்தைப் பெற்றுக்கெண்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் கடும் சவாலை எதிர்கொண்ட சிறிமுருகன் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.பெண்கள் பிரிவிற்கான போட்டியில் J/375 கிராம சேவகர் பிரிவின் அணி சிறப்பாக விளையாடி முதலாம் இடத்தைக் கைப்பற்றியது. விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அண்ணா சிலையடி இளைஞர் அணி இரண்டாம் இடத்தைத் தன்வசப்படுத்தியது.​3 சுற்றுக்களைக் கொண்ட குழுப்போட்டியாக அமைந்த இத்தொடரில், வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். கரவெட்டி பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் நடைபெற்ற இப்போட்டிகள், பிரதேச மட்ட விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் ஒரு களமாக அமைந்தது என்பதோடு ​வெற்றிபெற்ற அணிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றது கரவெட்டி பிரதேச செயலகம்

.

23April

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

09.11.2025

கரவெட்டி பிரதேச பிரிவுக்குட்பட்ட வீர வீராங்கனைகளுக்கான PSDG நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற உதைபந்தாட்டப்பயிற்சி முகாம் மகேசன் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது..

9sports1 9sports2 9sports3 9sports4

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

13.10.2025

தேசிய மட்டத்தில் ஆண்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டனர். கரவெட்டி பிரதேச இளைஞர் கழக சம்மேளன அணி
 
35வது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் யாழ் மாவட்டத்தில் வெற்றிபெற்ற கரவெட்டி பிரதேச அணி தேசிய மட்ட போட்டிக்காக யாழ்மாவட்டம் சார்ந்து ஒரு தெரிவு அணியை உருவாக்கி தேசிய மட்டத்தில் பத்து வருடத்தின் பின் 2025ம் ஆண்டு தேசியமட்ட உதைபந்தாட்ட போட்டியில் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளனர்.எமது அணியுடன் இணைந்து யாழ் மாவட்டம் சார்ந்து விளையாடிய வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்.

sportsevent

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

08.06.2025

மாவட்ட மட்ட கபடி போட்டியில் கரவெட்டி பிரதேச செயலக பெண்கள் அணி முதலாம் இடத்தையும், ஆண்கள் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

8JuneKdy1 8JuneKdy2 8JuneKdy3

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
29.05.2025
 
மாவட்ட மட்ட கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியில் கரவெட்டி பிரதேச செயலக பெண்கள் அணி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
29MayRB1
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
27.05.2025
 
எமது பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட பிரதேச மட்ட போட்டிகளில் ஓர் அங்கமான உதைபந்தாட்ட போட்டிகள் கொலின்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.இறுதி ஆட்டத்தில் இமையாணன் மத்தி விளையாட்டுக் கழகம் முதலாம் இடத்தினையும், யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
27MayDS1 27MayDS2
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
10.05.2025
 
மாவட்ட ரீதியிலான துடுப்பாட்ட போட்டியில் கரவெட்டி பிரதேச செயலக ஆண்கள் அணி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் பெண்கள் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
 
10MayCri1 10MayCri2
Scroll To Top