இலங்கையின் இயற்கை அழகையும் சுகாதாரத்தையும் பேணிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். நவீன வாழ்க்கையின் வேகத்தில் நமது சுற்றுச்சூழல் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வாக, 'சுத்தமான இலங்கை' என்னும் நாடளாவிய தூய்மை இயக்கம் 2026-ஆம் ஆண்டுக்கான விரிவான வேலைத்திட்டத்துடன் களமிறங்கியுள்ளது.
நடைபெறும் நாள்ஆகஸ்ட் 8 தொடக்க நாளாகும்
ஒவ்வொரு மாதத்தின் இறுதி சனிக்கிழமையும் இடம்பெறும்
நேரம் -காலை 08:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை (4 மணிநேரம்)
இடம் -வல்லை வெளி பிரதேசம்
கரவெட்டி பிரதேச செயலகப் பிரதேச சுற்றாடல் குழுக் கூட்டம் 30.07.2026 அன்று காலை 9.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி ம.உமாமகள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்தரையாடலில் கரவெட்டிப் பிரதேசப் பிரிவில் கண்டறியப்பட்ட சுற்றாடல் சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Read more: கரவெட்டி பிரதேச செயலகப் பிரதேச சுற்றாடல் குழுக் கூட்டம்-30.07.2026
கரவெட்டி பிரதேச செயலகத்தில் வரவிருக்கும் 5-ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கில், சிறப்பு வழிகாட்டல் கருத்தரங்கு 30.07.2026 (வியாழக்கிழமை ) அன்று கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் கரவெட்டி பிரதேச செயலகமும் இணைந்து இக்கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தன.இந்நிகழ்வில் சிறப்பு வளவாளராகக் கலந்துகொண்ட ஆசிரியர் திரு. பா. யசிதரன் அவர்கள், மாணவர்கள் பரீட்சையை மிக இலகுவாகவும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்வதற்கான சிறந்த உத்திகளையும், நுண்ணறிவு சார்ந்த வழிகாட்டல்களையும் தெளிவுபடக் கற்பித்தார்.மேலும், மாணவர்களின் அடைவு மட்டத்தைக் கண்டறியும் வகையில் மாதிரிப் பரீட்சை ஒன்று நடாத்தப்பட்டது. அதில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குக் காசோலைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.சிறப்புப் புள்ளிகளைப் பெற்ற 10 மாணவர்களுக்குச் பரிசில்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர்.நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துச் செய்திகள் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டனர்.
Read more: 5-ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு.
நாள் 01
“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை”: கரவெட்டியில் தேசிய நேர்மை வாரத் தொடக்க நிகழ்வு மற்றும் சத்தியப்பிரமாண நிகழ்வு.
ஜூலை 27 முதல் ஜூலை 31 வரையான காலப்பகுதியை "ஸ்ரீலங்கா கிளீன் ஸ்ரீலங்கா - தேசிய நேர்மை வாரம்" என ஜனாதிபதி செயலகத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகள் மற்றும் சிறப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக, நேர்மையான அரசு சேவையை வலுப்படுத்தும் நோக்கில் கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான முதலாம் நாள் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (27.07.2026) காலை 9:00 மணிக்கு கரவெட்டி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வைத் தொடர்ந்து, கரவெட்டி பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் முக்கிய தேசிய முன்னுரிமைகளாக ‘கிளீன் ஸ்ரீலங்கா’, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய மூன்று திட்டங்கள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.இத்திட்டத்தின் பிரதான அங்கமாக அரசு சேவைக்கான நேர்மை கலாச்சாரத்தை உருவாக்கும் செயல்பாடு தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது அனைவரது ஒத்துழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முக்கிய பொறுப்பாகும்.
உடுப்பிட்டி மகளிர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால், சுயதொழில் முயற்சியாளர்களுக்கான Saree Pleating and Ironing பயிற்சி 23.07.2026( வியாழக்கிழமை )அன்று உடுப்பிட்டி தையல் நிலையத்தில் நடாத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும் வளவாளராகக் கலந்துகொண்ட திருமதி. ஜெலாசன் தமிழினி அவர்கள் வழங்கினார்.
சிறுதொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்களின் தொழில்முனைவுத் திறன்களை மேம்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும் இப் பயிற்சி நெறி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.












