கரவெட்டி பிரதேச செயலகத்தில் 29.12.2025 (திங்கட்கிழமை) அன்று பிரஜா சக்தி தேசிய நிகழ்ச்சி திட்டம் எமது பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் வளவாளராக கரவெட்டி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி நி.கிருஷ்ணாலினி அவர்கள் கலந்து கொண்டு பயனளிக்கும் வழிகாட்டல்களை வழங்கினார்.
மேலும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜெ. ரஜீவன் அவர்கள் கலந்து கொண்டு சமூக அபிவிருத்தி சபை குழுத் தலைவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி, நிகழ்வை சிறப்பித்தார்.
Read more: பிரஜாசக்தி தேசிய நிகழ்ச்சி திட்டம் – விழிப்புணர்வு கருத்தரங்கு 2025
கரவெட்டி பிரதேச செயலக முன்றலில் 29.12.2025 அன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி நிகழ்வு எமது பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி.உமாமகள் மணிவண்ணன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், எமது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜெ. ரஜீவன் அவர்கள் பங்கேற்று, விற்பனை கூடத்தை திறந்து வைத்ததோடு உற்பத்தியாளர்களின் தொழில் முயற்சிகளை பாராட்டி அவர்களது திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
Read more: உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனைச் சந்தையும் கண்காட்சி நிகழ்வும் - 29.12.2025
கரவெட்டி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையில் நடைபெற்ற விளையாட்டுகளுக்கான வெற்றிகேடயம் வழங்கல் நிகழ்வு 23.12.2025 அன்று செவ்வாய்க்கிழமை எமது பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்களின் தலைமையில் கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் வெற்றியீட்டியவர்களுக்கான வெற்றி கேடயங்கள் வழங்கி பாராட்டப்பட்டது.
சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு 17/12/2025 அன்று உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் இராஜ கிராமத்தில் (J/363 கிராம அலுவலர் பிரிவு) நடைபெற்றது.
இந் நிகழ்வில் கரவெட்டி மேற்கு (J/363) கிராம அலுவலர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,ஆயுள்வேத வைத்தியர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் கலந்து கொண்டதுடன் தமது கருத்துக்களையும் வழங்கியிருந்தனர்.
Read more: உற்பத்தித்திறன் மூலம் வளமான கிராமம் -விழிப்புணர்வு செயலமர்வு
வடமாகாண நன்னடத்தை திணைக்களத்தினால் கரவெட்டி பிரதேச செயலகப்பிரிவில் மாதிரி கிராம திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட J/363 கரவெட்டி மேற்கை சேர்ந்த 04 பயனாளிகளுக்கு, வாழ்வாதாரத்தை வலுவூட்டும் செயற்பாடாக, 02 தையல் இயந்திரங்கள் 01 கடை குளிர்சாதனப்பெட்டி 75 கதிரைகள், 03 மேசைகள் ஆகியவற்றிற்கான காசோலைகள் கரவெட்டி பிரதேச செயலாளர் சார்பில் செயலக கணக்காளர், உதவித்திட்டமிடற் பணிப்பாளர், நிர்வாக கிராம அலுவலர் ஆகியோரால் 03.12.2025 அன்று வழங்கிவைக்கப்பட்டு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டது.












