இலங்கை இராணுவத்தின் தலைமையில் நாடு முழுவதும் 253 கடற்கரைப் பகுதிகளில் “சுத்தமான கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்” என்ற கருப்பொருளின் கீழ் கடற்கரைகளைச் சுத்தப்படுத்தும் தேசிய நிகழ்வு 23.05.2026 அன்று காலை 7:00 மணிக்கு வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
"Clean srilanka" அரச திட்டத்தின் இரண்டாம் கட்டமாக இந் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந் நிகழ்ச்சி திட்டத்தின் ஓர் அங்கமாக பருத்தித்துறை கற்கோவள கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு இன்று காலை ஆரம்பித்தோடு இந் நிகழ்வின் தூய்மைப் பணியில் சமூகப் பொறுப்புணர்வுடன் கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பருத்தித்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,சமூக அமைப்புகள், கடற்கரைதொழிற்சங்கங்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள்அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்பான பங்களிப்புடன் கற்கோவள கடற்கரை சுத்திகரிப்பு நிகழ்வினை வெற்றிகரமாக முடிவுறுத்தினர்.நமது கடற்கரைகளைப் பாதுகாப்போம்! சுற்றுலாவை மேம்படுத்துவோம்! தூய்மையான இலங்கையைக் கட்டியெழுப்புவோம்
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கரவெட்டி பிரதேச செயலகம் ஆகியன இணைந்து நடாத்திய தொழிற்சந்தை (Job Fair) நிகழ்வு (14.05.2026) வியாழக்கிழமை கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.இளைஞர், யுவதிகளின் எதிர்கால மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள்,தனியார் துறை வேலை வாய்ப்புகள்,தொழிற்கல்வி மற்றும் சுயதொழில் தொடர்பான விசேட வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன .
கரவெட்டி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், பொதுமக்களுக்கு விரைவான மற்றும் இலகுவான அரச சேவைகளை வழங்கும் நோக்கில் 29.04.2026 (புதன்கிழமை ) அன்று சிறப்பு நடமாடும் சேவை நடைபெற்றது.
இந்நிகழ்வு, சமரபாகு (J/357), கரணவாய் வடக்கு (J/360) மற்றும் கரணவாய் வடமேற்கு (J/361) கிராம சேவகர் பிரிவுகளை ஒருங்கிணைத்து, சமரபாகு கிராம சேவையாளர் பிரிவில் இடம்பெற்றது.இந்த நடமாடும் சேவையின் மூலம், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அரச சேவைகளை கிராம மட்டத்திலேயே எளிதாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, உள்நாட்டு உற்பத்தியாளர்களின் கைவினைத்திறனை வெளிப்படுத்தவும், அவர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்ட “புத்தாண்டு கண்காட்சியும் விற்பனை சந்தையும்” 10.04.2026 (வெள்ளிக்கிழமை) அன்று கரவெட்டி பிரதேச செயலக வளாகத்தில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.
Read more: “புத்தாண்டு கண்காட்சியும் விற்பனை சந்தையும்” -2026
இமையானன் மேற்கு RDS கட்டடத்தில் 07.04.2026 அன்றுஆபரணக் கைவினைப் பொருள் பயிற்சி நெறி நடைபெற்றது.கரவெட்டி பிரதேச செயலாளரின் வழிகாட்டல் மற்றும் அனுமதியுடன், தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் (NEDA) உத்தியோகத்தரின் ஒருங்கிணைப்பில் இப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.
சுயதொழில் வாய்ப்புகளை எதிர்பார்க்கும் மற்றும் கைவினைத் துறையில் ஆர்வமுள்ள 20 பயனாளிகள் இதில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.இப்பயிற்சி நெறிக்கான நிதிப் பங்களிப்பினை Friends நிறுவனம் வழங்கியிருந்தது.












