இமையானன் மேற்கு RDS கட்டடத்தில் 07.04.2026 அன்றுஆபரணக் கைவினைப் பொருள் பயிற்சி நெறி நடைபெற்றது.கரவெட்டி பிரதேச செயலாளரின் வழிகாட்டல் மற்றும் அனுமதியுடன், தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் (NEDA) உத்தியோகத்தரின் ஒருங்கிணைப்பில் இப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.
சுயதொழில் வாய்ப்புகளை எதிர்பார்க்கும் மற்றும் கைவினைத் துறையில் ஆர்வமுள்ள 20 பயனாளிகள் இதில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.இப்பயிற்சி நெறிக்கான நிதிப் பங்களிப்பினை Friends நிறுவனம் வழங்கியிருந்தது.
இப்பயிற்சியின் மூலம் உள்ளூர் மட்டத்தில் கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆற்றலை வளர்ப்பதோடு, பங்குபற்றியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.













