எமது பிரதேச செயலகத்தில் இன்று 2019.05.08 ஆந் திகதி காலை 10.00 மணிக்கு கடந்த 21 அந் திகதி ஈஸ்ரர் திருநாளிலன்று நடைபெற்ற பாரிய துயரச் சம்பவத்தில் உயிர்நீத்த அனைத்து உறவுகளுக்கு ஆத்ம சாந்திப் பிரார்த்தனையுடன் காயமடைந்து மற்றும் மனஅழுத்தங்களுக்கு உட்பட்டிருக்கும் உறவுகள் அதிலிருந்து மீள்வதற்கு இறைவனிடம் வேண்டிப் பிரார்த்தனை நிகழ்வும் மதகுருக்களின் முன்னிலையில் பிரதேச செயலாளரின் தலைமையில் நடைபெற்றது








வடமாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் நிதியினுாடாக மாற்றாற்றல் உடையோருக்கான சுயதொழில் உபகரணம் மற்றும் முச்சக்கர வண்டி வழங்கல் நிகழ்வுகள் கரவெட்டி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளரின் தலைமையில் செயலக சமூக சேவைக் கிளையில் 2019.05.02 ஆந் திகதி நடைபெற்றது.
![]() |
![]() |
பதிவாளர் நாயக திணைக்களத்தின் சேவையை நவீனமயப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய வைபவமானது எதிர்வரும் 2019.03.16 ஆந் திகதி பத்தரமுல்ல பதிவாளர் நாயக திணைக்களத்தில் மாண்புமிகு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.














