கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான எலிக்காய்ச்சலுக்கான முற்தடுப்பு மருந்தானது கிராம மட்ட உத்தியோகத்தர்கள்,கள உத்தியோகத்தர்கள் , வதிவிடங்களில் வயல் தண்ணீர் பாதிப்புள்ளோர்களுக்கும் கரவெட்டி பொது சுகாதார பரிசோதகர் (PHI) மூலம் இன்று (02.12.2025) வழங்கப்பட்டுள்ளது.
📢பொது மக்களுக்கான அறிவித்தல்
📌வயல்களில் வேலை செய்யும் விவசாயிகள்.
📌சேற்று நிலங்களில் பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுபவர்கள் அல்லது வயல் வெளிகளில் செங்கல் தயாரித்தல் அல்லது மணல் அள்ளுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள்.
📌இரத்தினக்கல் சுரங்கத் தொழிலாளர்கள்.
📌சேற்று நிலம் அல்லது நீர் தேங்கிய இடங்களில் விளையாட்டு மற்றும் ஏனைய செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள்.
உங்களை எலிக்காய்ச்சல் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மருந்துகளை சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகரின் ஆலோசனையுடன் பெற்றுக்கொள்ளுங்கள்.

தொழில் முன்னேற்றம் தொடர்பான பயிற்சி நெறியானது எமது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது வருகின்றது.இப் பயிற்சி நெறியானது அனுபவமிக்க வளவாளர்களினால் வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது . அதன் பதிவுகள் சில.....

சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நேற்றைய தினம் (24/11/2025) பிரதேச செயலாளர் தலைமையில் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர், உதவித்திட்டப் பணிப்பாளர்,நிர்வாக உத்தியோகத்தர்,எமது பிரிவிற்குட்பட்ட ஏனைய திணைக்கள அதிகாரிகள், எமது செயலக கள உத்தியோகத்தர்கள் மற்றும் J/363 கிராம அலுவலர் பிரிவின் கிராம மட்ட உத்தியோகத்தர்கள்,சமூக மட்ட அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஒரு வளமான கிராமம் ஒன்றினை உருவாக்குதல் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு 21.11.2025 அன்றுபுதிய நிர்வாக உத்தியோகத்தராக (பதில்) மதிப்பிற்குரிய திரு. திருநாவுக்கரசு கலைச்செல்வன் அவர்கள் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
அவரை கரவெட்டி பிரதேச செயலகம் அன்போடு வரவேற்பதோடு அவருடைய சேவைக்காலம் சிறப்பானதாக அமைய எங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

29.05.2023 தொடக்கம் 20.11.2025 வரையான காலப்பகுதியில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய மதிப்பிற்குரிய திரு.பாலசுப்பிரமணியம் மேகவண்ணன் அவர்கள் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று செல்கின்றார். அவருடைய அர்ப்பணிப்பு மிக்க சேவையை பாராட்டி வாழ்த்துவதில் கரவெட்டி பிரதேச செயலகம் பெருமை கொள்கிறது.
எமது நிர்வாக உத்தியோகத்தர் அவர்களது அர்ப்பணிப்பும், நேர்த்தியான நிர்வாக திறமையினையும் உணர்வு நிறைந்த சேவையினையும் நாங்கள் மனமார பாராட்டுகின்றோம். உங்களது சிறப்பான பங்களிப்பு எமது அலுவலகத்திற்கும் சமூகத்திற்கும் ஒரு பேராதரவாக இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Scroll To Top