கரவெட்டி பிரதேச செயலகத்தில் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கும், கௌரவிப்பு நிகழ்வும் வெள்ளிக்கிழமை (22.05.2026) பிற்பகல் 2:30 மணியளவில் கரவெட்டி பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
​​இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள கணக்காளர் திரு. இரட்ணம் முருகதாஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக நெல்லியடி வர்த்தக சங்கத்தின் செயலாளர் திரு. இராஜதுரை பிரதீப் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

​​இக்கருத்தரங்கில் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சமூகத்தை அதிலிருந்து பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு கருத்துக்கள் பகிரப்பட்டதோடு ​இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, கடந்த 2025ஆம் ஆண்டு போதை ஒழிப்புக்கான நிதி சேகரிப்பில் பங்களிப்பு வழங்கி, மிகக் கூடிய நிதியைச் சேகரித்த சங்கங்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

25drug7 25drug1 25drug2

25drug4 25drug5 25drug6

Scroll To Top