கரவெட்டி பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண் தொழில் முயற்சியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வானது இன்றைய தினம் திங்கட்கிழமை (25.05.2026) காலை 9.30 மணிக்கு கரவெட்டி பிரதேச செயலாளர் தலைமையில் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் சுயதொழில் துறையில் தடம் பதித்து, உள்ளூர் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்து வரும் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்கள் இந் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.இந் நிகழ்வு ப்ரண்ட்ஸ் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.














