இன்றைய தினம் 24.12.2024 செவ்வாய்கிழமை கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மகளிர் அபிவிருத்தி நிலைய பயிற்சியாளர்கள் 60 பேருக்கு IOM நிறுவனத்தின் மூலமாக தொழில் வழிகாட்டல் மற்றும் பாதுகாப்பான புலம் பெயர்வு தொடர்பான ஒருநாள் கருத்தரங்கு பதிவுகள்.....
மேலும் படிக்க: தொழில் வழிகாட்டல் மற்றும் பாதுகாப்பான புலம் பெயர்வு தொடர்பான கருத்தரங்கு
இன்றைய தினம் (13.12.2024) எமது பிரதேச செயலகத்தில் பிரதேச தொழில் முயற்சி மன்ற கலந்துரையாடல் இடம்பெற்றது. இக் கலந்துரையாடல் பிரதேச செயலக கணக்காளர் திரு.க.சுதர்சன் அவர்கள் தலைமையில் இடம் பெற்றது. கணக்காளர் வியாபாரப் பெயர் பதிவு தொடர்பாக விளக்கமளித்தார்.
இந் நிகழ்வில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள்,பொது சுகாதார உத்தியோகத்தர், வங்கி உத்தியோகத்தர்கள் (இலங்கை வங்கி,கொமர்ஷியல் வங்கி,DFCC வங்கி),சுற்றுச்சூழல் அதிகாரி,சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் ஆகியோர் கலந்து தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வியாபார அனுமதி,தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் வசதிகள் தொடர்பான கருத்துக்களை வழங்கினர்.
வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்திய பிரதேசத்தின் கலை கலாசாரத்தை பறைசாற்றிய பண்பாட்டு பெருவிழா.
இந் நிகழ்வு 04.12.2024 பேராசிரியர் செ.யோகராசா அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக திருவாளர். மருதலிங்கம் பிரதீபன் (மாவட்டச் செயலாளர்,யாழ்ப்பாணம்) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
12.12.2024 இல் அலரிமாளிகையில் நடைபெற்ற கலாபூஷணம் அரச விருது விழாவில் எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி கிழக்கு காட்டுப்புலம் கிராமத்தைச் சேர்ந்த திரு.காசியன் வீரபுத்திரன் அவர்கள் கலாபூஷணம் விருதினை பெற்றுக்கொண்டார்.
சுகாதார அமைச்சின் சுதேச வைத்திய பிரிவினால் பாரம்பரிய போசாக்கு உணவுக் கண்காட்சி நிகழ்வு இன்று(28.10.2024)எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.













