முதியோருக்கான தேசிய செயலகத்தால் முதியோர்கள் தங்களின் வீடுகளில் வசிக்க குறைந்தபட்ச வசதிகள் மற்றும் சுகாதார பொருட்கள் வழங்கல் 2024 திட்டத்தின் கீழ்  இன்று பிரதேச செயலகத்தில் முதியோர்களுக்கான கட்டில்கள் மற்றும் மெத்தைகள் வழங்கப்பட்டன.முதியோருக்கான தேசிய செயலகத்தால் முதியோர்கள் தங்களின் வீடுகளில் வசிக்க குறைந்தபட்ச வசதிகள் மற்றும் சுகாதார பொருட்கள் வழங்கல் 2024 திட்டத்தின் கீழ்  இன்று பிரதேச செயலகத்தில் முதியோர்களுக்கான கட்டில்கள் மற்றும் மெத்தைகள் வழங்கப்பட்டன.

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன் எமது பிரதேச செயலக  சமுர்த்தி அபிவிருத்திப் பிரிவினால் இன்று(04.310.2024) சர்வதேச சிறுவர் முதியோர் தினம் சிறப்பாக நடாத்தப்பட்டது .இந் நிகழ்வானது உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.உ.சிவகாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றதுடன் நிகழ்வின்  பிரதம விருந்தினராக  திரு.எவ்.சி.சத்தியசோதி (மாவட்டப் பணிப்பாளர் சமுர்த்தி- மாவட்டச் செயலகம் ,யாழ்ப்பாணம்) அவர்கள் கலந்து சிறப்பித்தார்

கிராம அலுவலர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கான அரச காணி கட்டளைச் சட்டம் தொடர்பான செயலமர்வு இன்று (29.08.2024) எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இச் செயலமர்விற்கு வளவாளராக எமது செயலகத்தின் குடியேற்ற உத்தியோகத்தர் திரு.க.கோபாலசூரியர் அவர்கள் கலந்து கொண்டார்.

2024 ம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி பிரதேச செயலாளரின் தலைமையில் சமுர்த்தி வங்கியின் அனுசரணையில் இன்றையதினம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற புலமைப்பரிசில் வழிகாட்டல் கருத்தரங்கின் பதிவுகள் சில.இவ்வழிகாட்டல் கருத்தரங்கிற்கு வளவாளராக ஆசிரியர் திரு.யசிதரன் அவர்கள் கலந்துகொண்டார்.

சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு நெல்லியடி பேருந்து தரிப்பிடத்தில்  பிரதேச செயலகத்தால் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையினை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றதன் பதிவுகள் சில

குடியுரிமை சாசனம்

Scroll To Top