இன்று (10.02.2025) எமது பிரதேச செயலகத்தில் புதிய பிரதேச செயலாளராக திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்கள் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்றையதினம் (04.02.2025) கரவெட்டி பிரதேச செயலக முன்றலில் "தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்" என்ற கருப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்டு பிரதேச செயலாளர் திரு. ஈ.தயாரூபன் அவர்கள் தலைமையில் தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகி தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இன்று (09.01.2025) பிரதேச செயலாளர் தலைமையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் குறைந்த வருமானம் பெறும் மக்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்தின் (2025 - 2027) கீழ் உத்தியோகத்தர்களை தௌிவூட்டும் கலந்துரையாடலானது எமது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இன்று (20.01.2025) "Clean Sri Lanka" தேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக எமது செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.பா.மேகவண்ணன் அவர்களால் அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

புதிய ஆண்டினை வரவேற்று தமது கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக காலை 8.30 மணிக்கு பிரதேச செயலாளர் அவர்களால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.தொடர்ந்து அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நேரலை உரை காட்சிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்கள் அனைவரும் "Clean Sri Lanka " திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து பிரதேச செயலாளர் அவர்கள் உத்தியோகத்தர்களுக்கு" clean Sri Lanka" வேலைத்திட்டம் பற்றிய கருத்துக்களையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.தொடர்ந்து பதவிநிலை உத்தியோகத்தர்களும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.இறுதியாக 2024 ஆம் ஆண்டிற்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்ட இலக்குகளை பூர்த்தி செய்து பிரதேச மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரைகள் வழங்கப்பட்டதுடன் கிராம அலுவலர்களுக்கான தினக்குறிப்பு பதிவேடுகளும் வழங்கப்பட்டன.

குடியுரிமை சாசனம்

Scroll To Top