கரவெட்டி பிரதேச செயலகபிரிவின் சிறந்த பெண்தொழில் முயற்சியாளர் திருமதி. இராஜேஸ்வரன் சுமதி அவர்களை அறிமுகம் செய்வதில் கரவெட்டி பிரதேச செயலகம் பெருமை கொள்கிறது.
2016 ம் ஆண்டு காலப்பகுதியில் J/369 கட்டைவேலி கிராம அலுவலர் பிரிவிற்கூடாக வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் பெற்று, பெண் தலைமை குடும்பமாக தனது குடும்ப வாழ்வாதாரம் என்ற சிந்தனைக்கு அப்பால் இன்று பல பெண்களின் வாழ்வாதாரத்திற்கு தொழில் வாய்ப்பினை வழங்குவதுடன், NAITA, VTA போன்ற தொழில் கல்விநிறுவனங்களின் தையல் பயிலுனர்களுக்கு தனது நிலையத்தினூடாக பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்.
தனது இத்துறையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு கரவெட்டி பிரதேச செயலாளர் மற்றும் கரவெட்டி பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரின் தொடர்ச்சியான வலுவூட்டல் மற்றும் வழிகாட்டுதல்கள் காரணமாக அமைந்ததாக நன்றியுடன் தெரிவித்துக்கொண்டார்.

17.10.2025 வெள்ளிக்கிழமை அன்று அரசடி சந்தியில் உள்ள தையல் நிலையத்திற்கு மேலதிகமாக, கொடிகாமம் வீதி, கரவெட்டி வடக்கு எனும் முகவரியில் கீர்த்தனா தையல் நிலையம் எனும் பெயரில் புதிய விற்பனை நிலையத்தினை எமது கரவெட்டி பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்கள் திறந்துவைத்து அவர்களுக்கான ஊக்கப்படுத்தல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

இதில் கரவெட்டி பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
17bene1 17bene2 17bene3 17bene4
Scroll To Top