இன்றைய தினம் (30.05.2025) கரவெட்டி பிரதேச கிராம அபிவிருத்தி சங்கங்கள் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் ஆகியவற்றின் அங்கத்தவர்களுக்கான கலந்துரையாடல் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கான அதிகாரங்கள் என்ன என்பது தொடர்பாகவும் சம காலத்தில் கிராம அபிவிருத்தி சங்கங்கள் எவ்வாறு சமூக பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என்பது தொடர்பாகவும் கிராம அபிவிருத்தி சங்கங்களின் அங்கத்தவர்களுக்கான பயிற்சிகள் சமாச புதிய நிர்வாக தெரிவு சங்கங்களின் வினைத்திறனான நிதி செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும் இணைந்து நடாத்தும் புதுவருட சந்தை 2025. 04. 09 இன்று எமது பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

Clean Sri Lanka நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இன்று (23.02.2025) எமது பிரதேச செயலகப் பிரிவின் வல்லைப் பாலத்தின் வடக்குப் பக்கமாக வல்லை நீரேரியின் கரையோரப் பகுதியில் சிரமதான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்கள் தலைமையில் "அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்" எனும் தொனிப்பொருளில் சிரமதான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இன்று (2025/03/29 ) எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடல் கரவெட்டி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் Dr.S.ஸ்ரீபவானந்தராஜா அவர்களின் தலைமையில் சிறப்புற இடம்பெற்றது.

" மக்கள் தேவைக்கு மகத்தான சேவை " வழங்கிய மதிப்பிற்குரிய எமது பிரதேச செயலாளர் திரு.ஈஸ்வரானந்தன் தயாரூபன் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா இன்று (10.02.2025) இடம் பெற்றது .
2018 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை கரவெட்டி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றி ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலராக இடமாற்றம் பெற்றுச் செல்கின்றார்.

Scroll To Top