இன்றைய தினம் (30.05.2025) கரவெட்டி பிரதேச கிராம அபிவிருத்தி சங்கங்கள் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் ஆகியவற்றின் அங்கத்தவர்களுக்கான கலந்துரையாடல் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கான அதிகாரங்கள் என்ன என்பது தொடர்பாகவும் சம காலத்தில் கிராம அபிவிருத்தி சங்கங்கள் எவ்வாறு சமூக பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என்பது தொடர்பாகவும் கிராம அபிவிருத்தி சங்கங்களின் அங்கத்தவர்களுக்கான பயிற்சிகள் சமாச புதிய நிர்வாக தெரிவு சங்கங்களின் வினைத்திறனான நிதி செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

திணைக்கள மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலக செயற்பாடுகள் மாதாந்த அறிக்கைகள் கணக்காய்வு சங்க பதிவுகள் சங்கங்களால் பேணப்பட வேண்டிய ஆவணங்கள் தொடர்பான பல விடயங்களை மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலக அபிவிருத்தி அலுவலர் கஜேந்திரன் அவர்களால் தெளிவாக அங்கத்தவர்களுக்கு எடுத்து கூறப்பட்டன.

30womensoc1 30womensoc2 30womensoc3 30womensoc4

Scroll To Top