உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தினை ஒட்டி கரவெட்டி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளரின் தலைமையில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரியினால் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு இன்று(10.10.2025) கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கான காரணங்களும், அதனை கண்டறியும் விதமும்,அதற்கான மருத்துவ ஆலோசனைகளும் சுகாதார வைத்திய அதிகாரியினால் வழங்கப்பட்டது.
இதில் கரவெட்டி பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NILET) நிகழ்நிலை மூலம் 150 மணித்தியால இரண்டாம் மொழி சிங்களப் பாடநெறியினை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் இறுதிநாள் நிகழ்வு 05.10.2025 அன்று நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மதிப்பிற்குரிய கரவெட்டி பிரதேச செயலாளரும் சிறப்பு விருந்தினராக மதிப்பிற்குரிய கரவெட்டி உதவிப் பிரதேச செயலாளரும் கலந்து சிறப்பித்தனர்.
சர்வதேச சிறுவர் முதியோர் தினத்தை முன்னிட்டு மூத்த பிரஜைகள் சங்கங்கள், பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் என்பவற்றிற்கிடையில் யாழ்ப்பாண மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டியில் இமையாணன் மேற்கு சிரேஷ்ட பிரஜைகள் சங்கம் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டமைக்காக 04.10.2025 அன்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கயிலாசபிள்ளை சிவகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலகத்தில் "உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்" என்னும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட சிறுவர் முதியோர் தின நிகழ்வில் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அபிவிருத்தி அதிகார சபையால் நடைமுறைப்படுத்தப்பட்ட"உங்களுக்கு ஒரு வீடு நாட்டிற்கு எதிர்காலம் - 2025 " எனும் கருப்பொருளில் அமைந்த மானிய வீட்டுத்திட்டம் உலக குடியிருப்பு தினமான 05.10.2025 அன்று கரவெட்டி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட வல்வெட்டி (J/355) கிராம அலுவலகர் பிரிவில் கையளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு கருணாநந்தன் இளங்குமரன் அவர்களினால் வீடு கையளிக்கப்பட்டுள்ளது. இவ் நிகழ்வில் மதிப்புக்குரிய கரவெட்டி பிரதேச செயலாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் , உதவி திட்டமிடல் பணிப்பாளர், கௌரவ பிரதேச சபை உறுப்பினர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோர்கள் கலந்து இவ் நிகழ்வானது நடைபெற்றது.
තවත් කියවන්න: "உங்களுக்கு ஒரு வீடு நாட்டிற்கு எதிர்காலம் - 2025 "
சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு 01.10.2025 அன்று கரணவாய் மத்தியில் கரணவாய், கரணவாய் தெற் கு கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கி சிரேஷ்ட பிரஜைகளுக்கான விளையாட்டு நிகழ்வுகள், உள ஆரோக்கிய நிகழ்வுகள் நடைபெற்றது. இந் நிகழ்வானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி.உமாமகள் மணிவண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
තවත් කියවන්න: சிரேஷ்ட பிரஜைகளுக்கான விளையாட்டு மற்றும் உள ஆரோக்கிய நிகழ்வுகள்












