உங்களை எலிக்காய்ச்சல் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மருந்துகளை சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகரின் ஆலோசனையுடன் பெற்றுக்கொள்ளுங்கள்.
තවත් කියවන්න: எலிக்காய்ச்சலுக்கு எதிரான முற்தடுப்பு மருந்து விநியோகிப்பு
அவரை கரவெட்டி பிரதேச செயலகம் அன்போடு வரவேற்பதோடு அவருடைய சேவைக்காலம் சிறப்பானதாக அமைய எங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
තවත් කියවන්න: புதிய நிர்வாக உத்தியோகத்தர் (பதில்) கடமைகளை பொறுப்பேற்பு
சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நேற்றைய தினம் (24/11/2025) பிரதேச செயலாளர் தலைமையில் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர், உதவித்திட்டப் பணிப்பாளர்,நிர்வாக உத்தியோகத்தர்,எமது பிரிவிற்குட்பட்ட ஏனைய திணைக்கள அதிகாரிகள், எமது செயலக கள உத்தியோகத்தர்கள் மற்றும் J/363 கிராம அலுவலர் பிரிவின் கிராம மட்ட உத்தியோகத்தர்கள்,சமூக மட்ட அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஒரு வளமான கிராமம் ஒன்றினை உருவாக்குதல் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
29.05.2023 தொடக்கம் 20.11.2025 வரையான காலப்பகுதியில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய மதிப்பிற்குரிய திரு.பாலசுப்பிரமணியம் மேகவண்ணன் அவர்கள் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று செல்கின்றார். அவருடைய அர்ப்பணிப்பு மிக்க சேவையை பாராட்டி வாழ்த்துவதில் கரவெட்டி பிரதேச செயலகம் பெருமை கொள்கிறது.
எமது நிர்வாக உத்தியோகத்தர் அவர்களது அர்ப்பணிப்பும், நேர்த்தியான நிர்வாக திறமையினையும் உணர்வு நிறைந்த சேவையினையும் நாங்கள் மனமார பாராட்டுகின்றோம். உங்களது சிறப்பான பங்களிப்பு எமது அலுவலகத்திற்கும் சமூகத்திற்கும் ஒரு பேராதரவாக இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
තවත් කියවන්න: சேவை நலன் பாராட்டு - நிர்வாக உத்தியோகத்தர் திரு.பாலசுப்பிரமணியம் மேகவண்ணன்












