கரவெட்டி பிரதேச செயலாளர் தலைமையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தினால் பொதுமக்களின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நடமாடும் சேவை 31.03.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று துன்னாலை கிராமத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
​பொதுமக்கள் தங்களது தேவைகளையும், நீண்ட காலத்திற்கும் தீர்க்கப்படாதுள்ள பல்வேறு நிர்வாகச் சிக்கல்களையும் இலகுவாகவும் விரைவாகவும் தீர்த்துக் கொள்ளும் நோக்கில் இந்த மக்கள் நலச் சேவை முன்னெடுக்கப்பட்டது.காலை 9.00 மணிக்கு துன்னாலை கிழக்கு கிராம அலுவலர் அலுவலகத்தில் ஆரம்பமான இந்த நடமாடும் சேவையில், துன்னாலை தெற்கு (J/370) மற்றும் துன்னாலை கிழக்கு (J/371) கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

கரவெட்டி பிரதேச செயலக மாதிரிக்கிராமத் தெரிவில் உள்ள J/363 கரவெட்டி மேற்கு கிராமத்தின் மகளிர் தினக் கொண்டாட்ட நிகழ்வு வெள்ளிக்கிழமை (27.03.2026) அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
​கரவெட்டி மேற்கு மகளிர் விவகாரக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, கிராம மட்டத்திலான பெண்களின் ஆளுமைகளை வெளிப்படுத்தும் நோக்குடன் நடாத்தப்பட்டது.​இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நெல்லியடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி ம.விஜயந்தி அவர்கள் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக கரவெட்டி பிரதேச செயலகப் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் நன்னடத்தை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அத்தோடு, கௌரவ விருந்தினர்களாக கிராம மட்ட உத்தியோகத்தர்களும் சமூகமளித்திருந்தனர்.

“கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (16.03.2026) திங்கட்கிழமை கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கரவெட்டி மேற்கு கிராம அலுவலர் பிரிவின் இராஜ கிராமத்தில் அமைந்துள்ள கரவைச்சுடர் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வு மேலதிக மாவட்டச் செயலாளர் (நிர்வாகம்) திரு. க. சிவகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன்,கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் அவர்கள் (பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர்) சிறப்பு பங்கேற்புடன் நிகழ்வை சிறப்பித்தார்.

கரவெட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 24.03.2026 செவ்வாய்க்கிழமை அன்று கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில்,பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ Dr. அர்ச்சுனா இராமநாதன் அவர்களும் ,பிரதேச சபை தவிசாளர் கௌரவ குமாரசாமி சுரேந்திரன் மற்றும் திணைக்களத்தலைவர்கள் , கிராம மட்ட அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இதில் பிரதேச திட்டங்கள் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான இழப்பீட்டு காசோலை வழங்கும் நிகழ்வு 14.03.2026 அன்று கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
கரவெட்டி பிரதேச செயலாளர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் அவர்கள் பாதிக்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கு இழப்பீட்டு காசோலைகளை வழங்கி வைத்தார்.டித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களினால் பாதிக்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் முன்னெடுத்து வரும் உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இழப்பீட்டு நிதி வழங்கப்பட்டது.

Scroll To Top