மேலும், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சு. ரவிகரன், வடமராட்சி தென்மேற்கு பிரதேச கிராம மற்றும் மாதர் அபிவிருத்திச்சங்க சமாசத்தின் தலைவர் திரு. தி. வரதராசன், வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை கௌரவ தவிசாளர் குமாரசாமி சுரேந்திரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கரணவாய் வடக்கு கிராம அபிவிருத்திச்சங்க நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் கிராம, மாதர் கிராம அபிவிருத்திச்சங்கங்களின் நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இக்கலந்துரையாடலில் கிராமங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, சமூக முன்னேற்றத் திட்டங்கள், பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் சங்கங்களின் செயற்பாடுகளை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.













