கரவெட்டி பிரதேச செயலகத்தில் விதாதா வள நிலையத்தினால் சுயதொழில் முனைவோர்களை வலுவூட்டும் நோக்கில் கல்வி அறிவு தொடர்பான கருத்தரங்கு விதாதாவள நிலையத்தில் 09.01.2026 அன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இந் நிகழ்வினை எமது உதவி பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.செ.சாருதர்ஷன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இக் கருத்தரங்கிற்கு வளவாளர்களாக பிராந்திய மத்திய வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர்களான திருமதி. பிரணவி யதுக்குலன் மற்றும் திருமதி. மாலினி அச்சுதன் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளூர் தொழில் முயற்சியாளர்களுக்கு சரியான நிதி முகாமைத்துவத்தின் அத்தியாவசியம் பற்றியும், நிதி மோசடி நிறுவனங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் சிறந்த அறிவூட்டலை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
சுய தொழில் முயற்சியாளர்களை நிலை பேறான வெற்றியினை அடையச் செய்வதே இக் கருத்தரங்கின் நோக்கமாக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.













