2019.4.12 -2025.10.24 வரை கடந்த ஆறு வருட காலமாக கரவெட்டியில் உதவிப் பிரதேச செயலாளராக தமது கடமைகளை பொறுப்பேற்ற நாள் முதல் இடமாற்றம் பெற்றுச்செல்லும் காலம் வரை கரவெட்டி பிரதேச மக்களுக்கு சிறப்பான சேவைகளை பல வழிகளிலும் ஆற்றியுள்ளார்.
நீங்கள் சேவை காலங்களில் அளித்த அர்ப்பணிப்பும்,நேர்மையும் மற்றும் சீரான நிர்வாகச் சேவையும் எங்களது உள்ளங்களை நெகிழச் செய்தவை உங்கள் ஒவ்வொரு முடிவிலும் மக்களின் நலனை முன்னிறுத்தும் பண்பும், ஈடுபாடும் தெளிவாக காணப்பட்டமை உங்கள் சிறப்பான ஆளுமையின் வெளிப்பாடாகும்.உதவிப் பிரதேச செயலாளராக மட்டுமன்றி பனை அபிவிருத்தி சபையில் பொது முகாமையாளராக(பதில்) ஆறுமாதகாலமாக தனது சிறப்பான சேவையை வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பல இடர் காலங்களிலும் தன்னலம் பாராது பிரதேச மக்களுக்காக சேவையாற்றியமை, எந்நேரமும் நேரடியாக சென்று பிரதேச மக்களுடைய பிரச்சனைகளை இனம் கண்டு அதற்கான வழிமுறைகளையும் உடனடியாக செய்து கொடுப்பதில் சிறந்தவர். அறிவு நிரம்பிய எங்கள் அம்மாவிற்கு என்றும் பண்பும் பணிவும் குறைந்ததில்லை. உங்களது சேவை காலம் ஒரு முன்மாதிரியாக எங்களை வழிநடத்தி வந்தது என்பதனை இங்கு குறிப்பிட்டு பெருமை கொள்கிறோம்
உங்கள் சேவையின் ஒளி பலருக்கு வழிகாட்டியாக இருந்ததோடு உங்கள் சேவையினை பெற்றமையால் கரவெட்டி பிரதேசமே பெருமை கொள்கின்றது. திறமைக்கும் நேர்மைக்கும் கிடைத்த பதவி உயர்வு இத்தோடு நின்று விடாமல் மேலும் பல பதவி உயர்வுகளைப் பெற்று சிறப்போடு நிர்வாகச் சேவையினை ஆற்றி பலரின் ஆசிகளையும் பெற்று சிறப்போடு வாழ உங்களது சேவைக்கு சிரம் தாழ்த்தி நன்றி கூறுவதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்து விடை பெற்று நிற்கின்றோம்.
புதிய செயலகத்திலும் உங்கள் திறமையும், தீர்மானமும் அனைவரையும் கவரட்டும் உங்கள் வழிநடத்தலில் பல வெற்றிகள் மலரட்டும்.















