கொரோனா வைரஸ் தொற்று – COVID-19  விழிப்புணர்வு தொடர்பான முக்கிய அறிவித்தல்   

covid 19

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை ( கொரோனா வைரஸ் தொற்று – COVID-19 ) காரணமாக கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு சேவையைப் பெற வருவோரும் சேவையை வழங்க வருவோரும் பின்வரும் அறிவுறுத்தல்களைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்குமாறு  பிரதேச செயலாளர் திரு.ஈ.தயாரூபன் அவர்களினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

1. இருமல், தும்மல், காய்ச்சல், தொண்டைவலி மற்றும் சுவாசப் பிரச்சனை உடையவர்கள் அலுவலகத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்கவும்.


2. அத்தியாவசியத் தேவை இருப்பின் மட்டும் அலுவலகத்திற்கு வருகை தரவும்.

3. பொது மக்களாகிய நீங்கள் ஒரு அத்தியாவசியத் தேவையை நிறைவு செய்து கொள்வதற்கு ஒருவர் மட்டும் வருகை தரவும்.


4. முகக்கவசம் (Mask) அணிந்து வருகை தரவும்.

5. அலுவலக வாயிலிலுள்ள நீர்க்குழாயில் உங்கள் கைகளை நன்றாக சவர்க்காரமிட்டு கழுவிய பின் உள் நுழையவும்.


6. கூட்டமாகக் கூடியிருப்பதைத் தவிர்த்து இருவருக்கிடையில் குறைந்தது 1m தூர இடைவெளியைப் பேணிக் கொள்ளவும்.

7. இருமும் போதும், தும்மும் போதும் உங்கள் வாயினையும் மூக்கினையும் கைக்குட்டையினால் / ரிசுக்கடதாசி ஒன்றினால் /முழங்கையினால் மூடிக்கொள்ளவும்.

“நாட்டிற்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி செயற்திட்டமானது மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கும் வழிகாட்டலுக்கும் அமைய ஜனாதிபதி செயலகத்தினால் நெறிப்படுத்தப்பட்டு யாழ்மாவட்டத்தில் கடந்த 23.08.2019 ஆந் திகதியிலிருந்து 2019.08.30 ஆந் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டது. கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் மொத்தமாக ரூபா 3,323,096.24 செலவிடப்பட்டு 364 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இச்செயற்திட்டத்தின் கீழ் கிராம சக்தி தேசிய வேலைத்திட்டம் , தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம், சிறு அளவிலான விவசாய வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டம்,தேசிய சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டம்,தேசிய போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டம்,தேசிய சிறுநீரக நோய்த்தடுப்பு வேலைத்திட்டம்,தேசிய பிள்ளைகளை பாதுகாப்போம் நிகழ்ச்சித்திட்டம்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் தொடர்பிலான வலுவூட்டல் தேசிய  நிகழ்ச்சித்திட்டம், நிலைபேறான  பாடசாலைகள் அபிவிருத்தி வேலைத்திட்டம்,  ஸ்மாட் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம், மரநடுகைத்திட்டம் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதித்திட்டம், தகவலறியும் சட்டம் உள்ளடங்கலாக பல விழிப்புணர்வுக் கருத்தரங்குகள்  போன்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.  

து தொடர்பான பதிவுகள் சில

21yzbcdfsul26272930t

இன்றைய பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் பதிவுகள் சில...

 IMG 0661  IMG 0666  IMG 0664
 IMG 0663  IMG 0665

கடந்த 2019.08.16 ஆந் திகதி எமது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட உடுப்பிட்டி கிராம அலுவலர் பிரிவில் சந்தனந்தறை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டமானது மாண்புமிகு பிரதமர் ரணில் விக்கரமசிங்க அவர்களினால் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.இந்நிகழ்வின் பதிவுகள் சில...

ranil 4     ranil3    ranil 1ranil 2   ranil 5

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தூர நோக்கின் அடிப்படையில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதையற்ற வாரம் தொடர்பான நிகழ்வுகளின் வரிசையில்  கடந்த 2019.06.25 ஆந் திகதி மாகாண ரீதியாக நடாத்தப்பட்ட வாகன பேரணியில் யாழ்மாவட்ட வாகனப் பேரணியுடன் எமது பிரதேச செயலகமும் இணைந்து கொண்டது. இதன் தொடர்ச்சியாக 2019.06.26 ஆந் திகதி உதவி பிரதேச செயலாளர் திருமதி.சிவகாமி உமாகாந்தன் அவர்களின் தலைமையில் செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள்,  கரவெட்டி சுகாதார வைத்திய பணிமனை உத்தியோகத்தர்கள்,  இப்பிரிவினைச் சேர்ந்த அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றலுடன் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான நடைபவனியொன்று பிரதேச செயலகத்திலிருந்து புறப்பட்டு இமையாணன் விளையாட்டு மைதானம் வரை சென்றது. மேலும் நடைபவனி நிகழ்வினைத் தொடர்ந்து மைதானத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.சிவகாமி உமாகாந்தன் அவர்களின் போதை எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு உரையும், செயலக உத்தியோகத்தர்களின் “போதை”என்ற தலைப்பிலான வீதி நாடகமும், இறுதியாக போதைப்பொருள் மற்றும் புகைத்தலுக்கு எதிரான வாசகங்களுடனான பலூன்கள் பறக்கவிடும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வுகளின் பதிவுகள் சில…….. 

Rally 2Rally 1

fin 1fin 10fin 8fin 2fin 6fin3dr 1dr5dr 2fin 12

Scroll To Top