“நாட்டிற்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி செயற்திட்டமானது மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கும் வழிகாட்டலுக்கும் அமைய ஜனாதிபதி செயலகத்தினால் நெறிப்படுத்தப்பட்டு யாழ்மாவட்டத்தில் கடந்த 23.08.2019 ஆந் திகதியிலிருந்து 2019.08.30 ஆந் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டது. கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் மொத்தமாக ரூபா 3,323,096.24 செலவிடப்பட்டு 364 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இச்செயற்திட்டத்தின் கீழ் கிராம சக்தி தேசிய வேலைத்திட்டம் , தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம், சிறு அளவிலான விவசாய வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டம்,தேசிய சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டம்,தேசிய போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டம்,தேசிய சிறுநீரக நோய்த்தடுப்பு வேலைத்திட்டம்,தேசிய பிள்ளைகளை பாதுகாப்போம் நிகழ்ச்சித்திட்டம்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் தொடர்பிலான வலுவூட்டல் தேசிய  நிகழ்ச்சித்திட்டம், நிலைபேறான  பாடசாலைகள் அபிவிருத்தி வேலைத்திட்டம்,  ஸ்மாட் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம், மரநடுகைத்திட்டம் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதித்திட்டம், தகவலறியும் சட்டம் உள்ளடங்கலாக பல விழிப்புணர்வுக் கருத்தரங்குகள்  போன்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.  

து தொடர்பான பதிவுகள் சில

21yzbcdfsul26272930t

குடியுரிமை சாசனம்

Scroll To Top