மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தூர நோக்கின் அடிப்படையில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதையற்ற வாரம் தொடர்பான நிகழ்வுகளின் வரிசையில்  கடந்த 2019.06.25 ஆந் திகதி மாகாண ரீதியாக நடாத்தப்பட்ட வாகன பேரணியில் யாழ்மாவட்ட வாகனப் பேரணியுடன் எமது பிரதேச செயலகமும் இணைந்து கொண்டது. இதன் தொடர்ச்சியாக 2019.06.26 ஆந் திகதி உதவி பிரதேச செயலாளர் திருமதி.சிவகாமி உமாகாந்தன் அவர்களின் தலைமையில் செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள்,  கரவெட்டி சுகாதார வைத்திய பணிமனை உத்தியோகத்தர்கள்,  இப்பிரிவினைச் சேர்ந்த அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றலுடன் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான நடைபவனியொன்று பிரதேச செயலகத்திலிருந்து புறப்பட்டு இமையாணன் விளையாட்டு மைதானம் வரை சென்றது. மேலும் நடைபவனி நிகழ்வினைத் தொடர்ந்து மைதானத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.சிவகாமி உமாகாந்தன் அவர்களின் போதை எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு உரையும், செயலக உத்தியோகத்தர்களின் “போதை”என்ற தலைப்பிலான வீதி நாடகமும், இறுதியாக போதைப்பொருள் மற்றும் புகைத்தலுக்கு எதிரான வாசகங்களுடனான பலூன்கள் பறக்கவிடும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வுகளின் பதிவுகள் சில…….. 

Rally 2Rally 1

fin 1fin 10fin 8fin 2fin 6fin3dr 1dr5dr 2fin 12

குடியுரிமை சாசனம்

Scroll To Top