உலக உற்பத்தித்திறன் தினம் - "கடினமாக உழைப்பது அல்ல புத்திசாலித்தனமாக உழைப்பது"
​உலக உற்பத்தித்திறன் நாளை (ஜூன் 20) முன்னிட்டு, கரவெட்டி பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தர்களின் உற்பத்தித்திறன் அறிவை மேம்படுத்தும் நோக்கில் 19.06.2026 அன்று உற்பத்தி திறன் தொடர்பான தேர்வு நடாத்தப்பட்டது.
​அலுவலகக் கோப்பு மேலாண்மை, நேர மேலாண்மை மற்றும் சிறந்த சேவை வழங்கல் போன்ற உற்பத்தித்திறன் சார்ந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நடாத்தப்பட்ட இப்பரீட்சையில்,திரு.ரா. துஷ்யந்தன் அவர்கள் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

​ தூய்மையே உற்பத்தித்திறனின் தொடக்கம் – சிரமதானப் பணி ,அதன் தொடர்ச்சியாக அன்றைய தினம் அலுவலகப் பணிச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரினதும் பங்களிப்புடன் சிரமதான நிகழ்வு இடம் பெற்றது.

​"சுத்தமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பணிச்சூழலே (Clean & Organized Workplace) ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும்" ​என்ற கோட்பாட்டிற்கு இணங்க, அலுவலக வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டு, கோப்புகள் முறைப்படுத்தப்பட்டன.
​பொதுமக்களுக்கு இன்னும் விரைவான, தரமான சேவைகளை வழங்குவதற்கும், நிலையான வளர்ச்சிக்கும் இத்தகைய விழிப்புணர்வு மற்றும் தூய்மைப் பணிகள் என்றும் வழிகாட்டியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது
20productivityday5 20productivityday1 20productivityday2
20productivityday3 20productivityday4

குடியுரிமை சாசனம்

Scroll To Top