கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இமையாணன் கிராமத்தில், இமையாணன் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் “இமையாணன் இதயம்” முப்பெரும் விழா 08.03.2026(ஞாயிற்றுக்கிழமை) அன்று சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வின் போது கிராமத்தின் நீண்டகால தேவையாக காணப்பட்ட தலைமைச்செயலகக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதுடன், சங்கத்தின் ஓராண்டு சாதனைப் பயண நிறைவு நிகழ்வும் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமும் ஒருங்கிணைந்து நடாத்தப்பட்டது.

 இவ்விழாவில் பிரதம விருந்தினராக கரவெட்டி உதவிப் பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.செல்வரட்ணம் சாருதர்ஷன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.மேலும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி. நிருபானந்தன் கிருஷ்ணாலினி (உதவி திட்டமிடல் பணிப்பாளர்,கரவெட்டி)திரு. சுப்பிரமணியம் ரவிகரன் (கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கரவெட்டி) அவர்களும் கௌரவ விருந்தினர்களாக திரு. முருகானந்தன் அபிராம் ( கிராம உத்தியோகத்தர், இமையாணன்)திரு. திருச்செல்வம் பிரதீபன் ( சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், இமையாணன்) திரு .கார்த்திகேசு குகராஜா (சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், இமையாணன்) திரு. சுப்பிரமணியம் புவீந்திரன்( பொது சுகாதாரப் பரிசோதகர், இமையாணன் ) திரு .ஸ்ரீ காந்தரூபன் சுசீதா (குடும்பநல உத்தியோகத்தர் இமையாணன்) ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்விற்கு தலைமை தாங்கி இமையாணன் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு. தனபாலசிங்கம் சசிதரன் அவர்கள் உரையாற்றியதுடன், சங்கத்தின் கடந்த ஓராண்டு கால செயற்பாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த சங்க உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரின் பங்களிப்பும் பாராட்டத்தக்கதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
8imaiithayam1 8imaiithayam2 8imaiithayam3
8imaiithayam4 8imaiithayam5 8imaiithayam6

குடியுரிமை சாசனம்

Scroll To Top