கரவெட்டி சுற்றுச்சூழல் அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஆயுள்வேத அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்து செவ்வாய்க்கிழமை (17.02.2026 ) அன்று கரவெட்டி மேற்கு J/363 பிரிவில் தொற்றா நோய்கள் தொடர்பான பரிசோதனைகளும் இலவச ஆயுள்வேத மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்து நடாத்தினர்.
இம்முகாமில் பொதுமக்களுக்கு தேவையான உடல்நல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தொற்றா நோய்கள் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. மேலும், இலவச ஆயுள்வேத சிகிச்சைகள் மற்றும் மருந்துகளும் வழங்கப்பட்டன. இந்த மருத்துவ சேவை ஆயுள்வேத வைத்தியர் திருமதி. த.கவிதா அவர்களினால் வழங்கப்பட்டது .

இதனுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் சுற்றாடல் விழிப்புணர்வு குழு தெரிவும் இடம்பெற்றதுடன், சுற்றுச்சூழல் சுத்தம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்வும் நடாத்தப்பட்டது.இந்நிகழ்வு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் பயனுள்ள நிகழ்வாக அமைந்தது.

17medicalcamp1 17medicalcamp2 17medicalcamp3

 

குடியுரிமை சாசனம்

Scroll To Top