கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் "சமூக சக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்" திட்டத்தின் கீழ், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவிலும் அபிவிருத்திப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட J/349 (கரணவாய் வடக்கு) கிராம அலுவலகர் பிரிவில் உள்ள ஐந்து விவசாயக் கிணறுகளைப் புணரமைப்பு செய்வதற்காக 1.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (02.06.2026) அன்று பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜெயச்சந்திரன் ரஜீவன் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இத் திட்டம் விவசாயிகளின் நீர் மேலாண்மை, விவசாய உற்பத்திக்கு பெரும் பங்களிப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.














