கரவெட்டி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், பொதுமக்களுக்கு விரைவான மற்றும் இலகுவான அரச சேவைகளை வழங்கும் நோக்கில் 29.04.2026 (புதன்கிழமை ) அன்று சிறப்பு நடமாடும் சேவை நடைபெற்றது.
இந்நிகழ்வு, சமரபாகு (J/357), கரணவாய் வடக்கு (J/360) மற்றும் கரணவாய் வடமேற்கு (J/361) கிராம சேவகர் பிரிவுகளை ஒருங்கிணைத்து, சமரபாகு கிராம சேவையாளர் பிரிவில் இடம்பெற்றது.இந்த நடமாடும் சேவையின் மூலம், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அரச சேவைகளை கிராம மட்டத்திலேயே எளிதாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில் கரவெட்டி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு, பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடி, அவர்களது குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து உடனடி தீர்வுகளை வழங்கினர்.மக்கள் நலனை முன்னிறுத்தி, சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்குடன் இந்நடமாடும் சேவை ஒழுங்கமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

29mobile1 29mobile2 29mobile3

29mobile4 29mobile5 29mobile6

 
Scroll To Top