கரவெட்டி பிரதேச செயலக முன்றலில் 29.12.2025 அன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி நிகழ்வு எமது பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி.உமாமகள் மணிவண்ணன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், எமது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜெ. ரஜீவன் அவர்கள் பங்கேற்று, விற்பனை கூடத்தை திறந்து வைத்ததோடு உற்பத்தியாளர்களின் தொழில் முயற்சிகளை பாராட்டி அவர்களது திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த சிறுதொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டு தமது உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்தனர்
இத்தகைய நிகழ்வுகள் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவளித்து அவர்களின் திறமைகளையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கத்தோடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந் நிகழ்வு பிரண்ட்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.













