கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் மாதிரி கிராம தெரிவில் உள்ள கரவெட்டி மேற்கு பிரிவில் ஸ்ரீ நாரத வித்தியாலய மண்டபத்தில் 10.11.2025 அன்று பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயற்றிட்டம் வடக்கு மாகாண நன்னடத்தை திணைக்களம் மற்றும் கரவெட்டி பிரதேச செயலகம் இணைந்து மேற்கொள்ளபட்டது.
இந் நிகழ்வானது கரவெட்டி பிரதேச செயலாளர் சார்பில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. கிருஷ்ணாளினி நிரூபன் அவர்கள் தொடக்கவுரையை வழங்கி ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து கிராம மட்ட பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு காணுதல் தொடர்பாக யாழ்ப்பாணம் சிரேஷ்ட நன்னடத்தை அலுவலர் திரு.வ.விக்னராஜா அவர்களும், சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கரவெட்டி NCPA சிறுவர் பாதுகாப்பு அலுவலர் திருமதி ஜெனோபா அவர்களும், சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பாக கரவெட்டி நன்னடத்தை அலுவலர் திருமதி ச.அகிலா அவர்களும், போதைப்பொருள் பாவனை சார்ந்த விடயங்கள் தொடர்பாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் திருமதி அ. சியாமினி அவர்களும் விழிப்புணர்வை மேற்கொண்டனர்.

நிகழ்வில் பிரிவின் கிராம மட்ட உத்தியோகத்தர்களும் ,பிரதேச செயலக crpa , மற்றும் போதை தடுப்பு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர். இதற்கான நிதி அனுசரணை வடக்கு மாகாண நன்னடத்தை திணைக்கள PSDG செயற்றிட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

10drugaware1 10drugaware2 10drugaware3 10drugaware4

Scroll To Top